ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் ஆட்டமொன்றில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் இன்று முதல் முதலாக நடைபெறவுள்ளது.

அபுதாபியில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் 15 ஆவது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. 

இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் உள்ளன.

பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் சூப்பர் பார்மில் உள்ளனர். கோலியின் நிலை இன்னும் மந்த கதியிலேயே உள்ள நிலையில் அவரும் அதிரடிக்கு திரும்பினால் அணி வலிமையாகி பெறும்.

அதேபோல் ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் சுமித், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், திவேதியா நிலைத்து நின்று விட்டால் எதிரணி பாடு அதோ கதிதான்.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 இல் ராஜஸ்தானும், 8 இல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. 

இது இவ்வாறிருக்க சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸும் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.