நாட்டிற்கு கடல் வளியாக இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 902 கிலோ கிராம் மஞ்சளுடன் மன்னார் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் இருவரும் மஞ்சளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் மன்னார் , புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 22 மற்றும் 48 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களை தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு , தனிமைப் படுத்தல் நிறைவடையும் பட்சத்தில் அவர்களை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.