துருக்கி நகரமான இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

59 வயதான 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையின் கட்டுரையாளர் தனது திருமணத்திற்கான ஆவணங்களை பெறுவதற்காக 2018 ஒக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக வளாகத்திற்குள் நுழைந்த பின்னர் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
தூதரகத்தில் உள்ள சவுதி அதிகாரிகளால் அவரது உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் அவரது உடல் பாங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சவுதி மகுட இளவரசர் முகமது பின் சல்மான் இராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்களின் உத்தரவின்பேரில் இந்த கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக ஆர்வலர்களும் மனித உரிமைகள் குழுக்கள் கூறியுள்ளன. எனும் இதனை ரியாத் மறுத்து வருகிறது.
மரணதண்டனைகள் மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரான ஆக்னஸ் காலமார்ட், ஜூன் 2019 இல் வெளியிட்ட ஒரு விசாரணை அறிக்கையில்,
முகமது பின் சல்மான் மற்றும் பிற மூத்த சவுதி அதிகாரிகள் இந்தக் கொலைக்கு பொறுப்பானவர்கள் என்பதற்கான நம்பகமான ஆதாரங்களை கண்டறிந்தனர்.
சவுதி நீதி கட்டமைப்பானது அரசியல் கையாளுதலுக்கு ஆளாகியுள்ளதால், கஷோகிக்கு நீதி கிடைப்பது மிகவும் கடினம் என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தது என்றும் காலமார்ட் கூறினார்.
செப்டம்பர் மாதம், கஷோகி வழக்கில் விசாரிக்கப்பட்ட எட்டு பிரதிவாதிகளுக்கான இறுதி தீர்ப்புகளை சவுதி தலைமை சட்டத்தரணி அறிவித்தார்.
அதன்படி பிரதிவாதிகளில் 5 பேருக்கு 20 ஆண்டுகள், ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரை, இருவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் சவுதி அதிகாரிகள் பிரதிவாதிகளின் அடையாளங்களை வெளியிடத் தவறிவிட்டனர்.
இதற்கிடையில், ஜூலை மாதம் துருக்கி சவுதி பத்திரிகையாளர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 20 சவுதி நாட்டினரின் சொந்த விசாரணையை ஆரம்பித்தது.
விசாரணையில் சந்தேக நபர்களில் முகமது பின் சல்மானின் இரண்டு முன்னாள் மூத்த உதவியாளர்கள் உள்ளனர்.
குற்றச்சாட்டுப்படி, சவுதி அரேபியாவின் முன்னாள் துணை புலனாய்வுத் தலைவர் அகமது அல்-ஆசிரி ஒரு குழுவை நிறுவி, சவுதி அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளரின் கொலையைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.
முன்னாள் அரச நீதிமன்றமும் ஊடக ஆலோசகருமான சவுத் அல் கஹ்தானி, குறித்த குழுவுக்கு உத்தரவுகளை வழங்குவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தூண்டி வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
மற்ற சந்தேக நபர்கள் முக்கியமாக சவுதி அதிகாரிகள், இந்த படுகொலை நடவடிக்கையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. துருக்கிய சட்டத்தரணிகள் இந்த சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- ஜெ.அனோஜன்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM