பேஸ்புக்,டுவிட்டர், கூகுள் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள்  இணைய நிறுவனங்களை பாதுகாக்கும் ஒரு முக்கிய சட்டம் குறித்து தானாக முன்வந்து சாட்சியமளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். 

ஒக்டோபர் 28 ஆம் திகதி அன்று செனட் சபையின் வர்த்தக குழுவின் முன் இவர்கள் சாட்சியமளிக்க உள்ளனர்.

Facebook, Twitter, Google CEOs will testify before US Senate commerce  committee | Deccan Herald

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதி   நடைபெற உள்ள நிலையில், இதில் தாக்கம் செலுத்தம் சமூக ஊடகங்களை கட்டுபடுத்தும் நோக்கில் பயனாளர்களின் பதிவுகளின் உள்ளடக்கத்தின் மீதான இணைய நிறுவனங்களை பொறுப்பிலிருந்து பாதுகாக்கும் தகவல்தொடர்பு ஒழுக்கச் சட்டத்தின் பிரிவு 230 எனப்படும் சட்டத்தை சீர்திருத்துவது தொடர்பான விவாதங்களுக்கு மேலதிகமாக, விசாரணை ஒன்றை முன்னெடுக்க செனட் சபை தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பில், பேஸ்புக், டுவிட்டர், கூகுள் ஆகியவற்றின் மூன்று தலைமை நிர்வாக அதிகாரிகளை ஆஜர்படுத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க செனட் சபை குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர், கூகுள் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள்  தானாக முன்வந்து சாட்சியமளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். 

Senate committee votes to subpoena Facebook, Google and Twitter CEOs |  Engadget

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ஜாக் டோர்சி ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளதை நேற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினர்.

அதேவேளை,  கூகுள் சார்பாக  கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சாய் சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி இது குறித்து வெள்ளிக்கிழமை தமது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

விசாரணை ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும் மற்றும் அமெரிக்க மக்களுக்கு மிகவும் முக்கியமானது: தேர்தல்களைப் பாதுகாக்க நாங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.