இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘அலறல்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Published By: Gayathri

03 Oct, 2020 | 03:43 PM
image

அறிமுக இயக்குநர்கள் ரூபநாதன் மற்றும பாரூக் இணைந்து இயக்கியிருக்கும் அலறல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி இயக்குநரான பா ரஞ்சித் வெளியிட்டார்.

GD புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘அலறல்’. 

இப்படத்தில் புதுமுகங்கள் நந்தினி, ஸாகித்யா, நடிகர் கிரி ஆகியோர் அறிமுகமாகிறார்கள். 

இவர்களுடன் ‘பிகில்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த நடிகர் சாய் தீனா, பேபி தன்யஸ்ரீ, மாஸ்டர்  சுடர் நிலவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இந்த படத்தை அறிமுக இயக்குநர்களான ம.ரூபநாதன் மற்றும் அ.பாரூக் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். 

படத்தைப் பற்றி இவர்கள் பேசுகையில், ‘ உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் பெண்ணியம் மற்றும் குழந்தைகளின் மனோதத்துவவியலைக் கருவாகக்கொண்டு, திகில் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த கொமர்சல் திரைப்படமாக  உருவாக்கியிருக்கிறோம். 

இதில் நடிகர் சாய் தீனா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அலறல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டதற்கு அவருக்கு படக்குழுவினர் சார்பில்  நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்