பதுளை மாவட்டத்தின் தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றில் அதிபர்களின் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இப்பற்றாக்குறை இருந்து வரும் பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களுக்கு தகைமையுள்ள அதிபர்களை நியமிக்கும்படி கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம் முசம்மிலுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

நிவாரணம் வழங்குவதில் குறைபாடு | தினகரன்

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

  “தமிழ்ப் பாடசாலைகளில் ஏற்பட்டிருக்கும் அதிபர் வெற்றிடங்களுக்கு அதிபர் தகைமையற்றவர்களை நியமிப்பதன் மூலம், தமிழ் பாடசாலைகள் கல்வி தொடர்ந்தும் பெரும் பின்னடைவுகளையே எதிர்நோக்கும். ஆகவே, இது விடயத்தை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து அதிபர் தகைமையுள்ளவர்களினால், ஏற்பட்டிருக்கும் அதிபர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன். 

அரசின் கவனம் மாவட்ட தமிழ் பாடசாலைகள் விடயத்தில் இல்லாத நிலை தென்படுகின்றது. அவற்றினை நிவர்த்தி செய்து, பாடசாலைகளின் அபிவிருத்தி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்நிலையில், அதிபர் நியமனங்களையும் முறையாக மேற்கொள்ளாதவிடத்து மாகாண தமிழ்க்கல்வி மேலும் பாரிய பின்னடைவினை எதிர்கொள்ளும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவ மாணவிகளேயாவார். 

ஆகவே,  இது குறித்து தங்களின் மேலான கவனம் செழுத்தப்பட்டு,  அதிபர் வெற்றிடங்களை   பூர்த்தி செய்யும் விடயங்களில் அதிபர் தகைமையுள்ளவர்களை நியமிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.