ஹட்டன் - டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில்  தனியார் பஸ் விபத்துக்குள்னாதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

அதில்  காயமடைந்தவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவதாக  பொலிஸார் தெரித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

அவர்களில் ஒருவர் மேலதிக சிசிச்சைகளுக்காக கண்டிக்கு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.