'தடம்' பட புகழ் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'பவுடர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'தாதா 87', 'பப்ஜி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பவுடர்'. 

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில், 'தடம்' பட புகழ் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். 

இவருடன் நடிகர்கள் மனோபாலா, வையாபுரி, ஆதவன், நடிகை அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

போதை பொருள் கடத்தல் தொடர்பான கிரைம் திரில்லர் வித் பிளாக் கொமடி ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்ய, லியாண்டர் லீ மாற்றி இசை அமைத்திருக்கிறார்.

'பவுடர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை வித்யா பிரதீப்பின் கையில் வாள் இருப்பதும், கண்ணாடியில் அவள் பேயாக தெரிவதும் ரசிகர்களை ஆர்வமூட்டி இருப்பதால், இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.