சுமார் 200 பேர் உயிரிழந்த மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த பெய்ரூட் துறைமுகத்தில் ஆகஸ்ட் மாதம் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முன்னணி புலனாய்வாளர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெய்ரூட்டிற்கு ஆயிரக்கணக்கான தொன் அம்மோனியம் நைட்ரேட்டை ஏற்றிச் சென்ற கப்பலின் கேப்டன் மற்றும் உரிமையாளருக்கு பிடியாணை பிறப்பித்தள்ளனர்.

பெய்ரூட்டின் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,700 தொன் அம்மோனியம் நைட்ரேட் ஆகஸ்ட் 4 அன்று வெடித்தது.

இதனால் 193 பேர் உயிரிழந்தனர், சுமார் 6,500 பேர் காயமடைந்தனர், கிட்டத்தட்ட 300,000 மக்களை வீடுகளை இழந்து நிர்க்கதிக்குள்ளாகினர்.

இந் நிலையில் இது தொடர்பில் இடம்பெற்ற வரும் வழக்கினை அரசு வழக்கு விசாரணைக்கு அனுப்பிய நீதிவான் பாடி சவ்வான், பெய்ரூட்டுக்கு அமோனியத்தை ஏற்றிச் சென்ற கப்பலின் கேப்டன் மற்றும் உரிமையாளர்களான இரு ரஷ்யப் பிரஜைகளை தடுத்து வைக்குமாறும் இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்தார்.

இவர்களின் பெயர் விபரங்களை லெபனான் தேசிய செய்தி நிறுவனங்கள் வெளியிடாத போதிலும், 2013 ஆம் ஆண்டு துருக்கியிலிருந்து அமோனியத்தை பெய்ரூட்டுக்கு ஏற்றிச் சென்ற எம்.வி.ரோசஸஸ் கப்பலுக்கு கேப்டனான போரிஸ் புரோகோஷேவ் செயற்பட்டுள்ளார்.

அதேபோன்று மத்தியதரைக் கடல் தீவான சைப்ரஸில் வசிக்கும் ரஷ்ய தொழிலதிபர் இகோர் கிரேச்சுஷ்கின் 2012 ஆம் ஆண்டில் சைப்ரியட்டில் இருந்து இந்த சரக்குக் கப்பலை தொழிலதிபர் சரலம்போஸ் மனோலி வாங்கியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இன்டர்போலின் லெபனான் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் கிரேச்சுஷ்கியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.