ஐஸ் போதைப்பொருளுடன் கல்கிஸை -  பொருப்பன பகுதியில் சந்தேக நபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே இவ்வாறு 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.