அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கோழி இறைச்சிக்கான கட்டுபாட்டு விலையின் கீழ் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது எனக் கூறி ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டுள்ள 495 ரூபாவிற்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கோழி பண்ணை உரிமையாளர்களின் வரி நீக்கப்பட்டு, அவர்களுக்கான சலுகைகள் செய்து தரப்படுமாயின் குறித்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.