ஹட்டன் - டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 30 பயணிகள்  காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (02.10.2020) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.