(செ.தேன்மொழி)

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

20 ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிலையில் கட்டளைக்கமைய திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், துறைசார் நிபுணர் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சரத்தையும் ஆழமாக ஆய்வு செய்வதையே நிபுணர் குழு செய்து வருகின்றது. இந்த குழு நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட குழுவாகும். நல்லாட்சி அரசாங்கம் இந்த குழுவின் தலைமைத்துவதத்தையும் எதிர் தரப்பினருக்கே வழங்கியிருந்தது.

சபைமுதல்வர் துறைசார் நிபுணர் குழுவில் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை சமர்ப்பிக்காமலே, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 

அரசாங்கம் நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக பாராளுமன்றத்தில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சமர்பித்துள்ளது.  

இந்நிலையில் திருத்தம் தொடர்பில் முழுமையான விவதாம் நடத்துவதற்கு கூட இடமளிக்காது. தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்துக் நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றது என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.