Chinese Dragon Café  கிளை இப்போது பெலவத்தையில்

Published By: Priyatharshan

18 Jul, 2016 | 12:36 PM
image

இலங்கையில் முன்னணி சீன உணவகமாக திகழும் சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட், தனது கிளை வலையமைப்பு விஸ்தரிப்பு செயற்திட்டத்துக்கமைய, புதிய கிளையை இல. 444, பன்னிப்பிட்டிய வீதி, தலங்கம தெற்கு, பத்தரமுல்ல எனும் முகவரியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. 

அதிகளவு இடவசதிகளைக் கொண்ட இந்த புதிய கிளை, வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன் புதிய சீன உணவு வகைகளுடன் வாடிக்கையாளர்களின் சுவையரம்புகளுக்கு சிறந்த சுவையை வழங்கி மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

பெலவத்தை நகரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த கிளையின் மூலமாக, பம்பலப்பிட்டி, ராஜகிரிய, கொழும்பு கோட்டை, வத்தளை மற்றும் கல்கிசை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கிளை வலையமைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு “நினைவிருக்கும் உணவு” எனும் தொனிப்பொருளுக்கமைய சுவையான உணவு வகைகளை வழங்க மேலும் பக்கபலமாகவும் அமைந்துள்ளது.

சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தில் காணப்படும் சூழல், குடும்பங்கள், நண்பர்கள் குழுக்கள், உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ளது. 

இவ்வாறு வருகை தரும் விருந்தினர்களுக்கு நட்புறவான சேவைகளை வழங்கும் வகையில் உணவகத்தின் ஊழியர்கள் செயலாற்றி வருகின்றனர்.

சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தினால் வழங்கப்படும் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்திலிருந்து உணவு உட்கொள்ளல் (Dine-in)உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லல் வசதி (Take Away food), வீட்டுக்கு மற்றும் அலுவலகத்துக்கு உணவு விநியோகம் (Home and Office Delivery), அலுவலக ஊழியர்களுக்கான உணவு விநியோகம் (Meals for office staff) போன்றன அடங்கியுள்ளதுடன்  chinesedragoncafe.com இணையத்தளத்தினூடாகவும் Facebook பக்கத்தினூடாகவும் உணவுகளை ஓடர் செய்து கொள்ளக்கூடிய வசதியும் வழங்கப்படுகிறது.

தமது உணவகங்களை அண்மித்துக் காணப்படும் பிரதேசங்களுக்கு 45 நிமிடங்களினுள் உணவை விநியோகிப்பதற்கான உறுதி மொழியை சைனீஸ் ட்ராகன் கஃபே வழங்குகிறது. சைனீஸ் ட்ராகன் கஃபே சீன உணவு வகைகளுக்கு மேலதிகமாக ஸ்ரீ லங்கன், மொங்கோலியன், தாய்லாந்து மற்றும் பார்பெக்கியு உணவு வகைகளை சகல நிகழ்வுகளுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் (get-togethers) நியாயமான விலையில் வழங்குகிறது.

1942 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சீனர்கள் மூலமாகரூபவ் சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகம் பம்பலப்பிட்டியில் ஸ்தாபிக்கப்பட்டது. பாரம்பரிய சீன உணவு வகைகளை தயாரித்து வழங்கும் வகையில் இந்த உணவகம் செயலாற்றி வருகிறது. 

74 ஆண்டுகளாக, சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகம், இலங்கையின் நுகர்வோருக்கு 400க்கும் அதிகமான சுவை மிகுந்த உணவு வகைகளை வழங்கி வருகிறது.

பாரம்பரிய சீன உணவு வகைகளுக்கு அப்பால் சென்று, “நினைவிருக்கும் உணவு” எனும் தொனிப்பொருளுக்கமைய சுவையான உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சைனீஸ் ட்ராகன் கஃபே, நாவில் சுவையூறும், Hot & spicy seafood (Tom Yum) Soup, Hot butter cuttlefish, Seafood fried rice, Chilli crab, Manchurian chicken, Mock duck in kungpao sauce மற்றும் சீன நாட்டின் விசேட உணவு வகைகளையும் தயாரித்து வழங்குகிறது.

சைனீஸ் ட்ராகன் கஃபே முகாமைத்துவ பணிப்பாளர் நைஷாட் உதேஷி குறிப்பிடுகையில்,

“நாட்டில் காணப்படும் பழமையான சீன உணவகம் எனும் வகையில், சுமார் 74 ஆண்டுகளாக மக்களுடன் சிறந்த உறவை பேணி வருகிறோம். எனவே, நாம் அவர்களுக்கு நினைவிருக்கும் உணவுகளை வழங்க எப்போதும் முயற்சி செய்கிறோம். சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் சகாயமான விலையில் அசல் சீன உணவு வகைகளை வழங்குவது எமது மற்றுமொரு நோக்கமாக அமைந்துள்ளது. 

நகரப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற சீன உணவகமாக நாம் திகழ்கிறோம். பல தசாப்த காலமாக நாம் இந்த நிலையைப் பேணி வருகிறோம், ஏனெனில் எமது உணவுகளின் தரம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. அனுபவம் வாய்ந்த சமையல் நிபுணர்கள் எம்முடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்துள்ளனர், எமது வெற்றிகரமான செயற்பாட்டின் பின்னணியில் இவர்கள் காணப்படுகின்றனர்” என்றார்.

“சைனீஸ் ட்ராகன் கஃபே ஏனைய உள்நாட்டு சீன உணவகங்களிலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரிய மற்றும் புதிய சீன உணவு வகைகளை வழங்கிய வண்ணமுள்ளது. 

ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தை கொழும்பை அண்மித்தவர்கள் மட்டுமே அனுபவித்திருந்தனர். கொழும்பு நகருக்கு வெளியே வசிக்கும் மக்களுக்கும் எமது பாரம்பரிய, புதிய நா ஊறும் உணவு வேளைகளை சுவைத்து மகிழக்கூடிய வகையில் எமது கிளை வலையமைப்பை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58