சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Published By: Vishnu

01 Oct, 2020 | 05:30 PM
image

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஆயிரத்து முன்னூற்றி மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த வகையில் இன்றைய தினம் சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது நிலைமையில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்து இராணுவத்திடம் சரண் அடையும் போது ஒப்படைத்த தமது சிறுவர்களுக்கு இதுவரை எந்தவித பதிலும் அரசாங்கம் வழங்காத நிலையில் தமது பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி இன்றய சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்ரிப்பதாக தெரிவித்து கறுப்புக் கொடிகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்திருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க கட்டிடத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10