கற்பிட்டி, மண்டலகுடா பகுதியில் மன்சாஹிர் முஹம்மது ரிஸ்வான் எனும் 14 வயதுடைய சிறுவன் காணாமல்போயுள்ளான்.

கடந்த 27 ஆம் திகதி முதல் குறித்த சிறுவன் காணாமல்போயுள்ளதாக அவரது தந்தை அப்துல் லதீப் மனசாஹிர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கற்பிட்டி அல்அக்ஷா தேசியப் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன், கடந்த 27 ஆம் திகதி வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற போது நீல நிற டீ சேர்ட்டும், நீளக்காற் சட்டை அணிந்திருந்ததாக சிறுவனின் தந்தை அப்துல் லதீப் மனசாஹிர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது மகன் தொடர்பில் ஏதும் தகவல் தெரிந்தால் 0762070043 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறும்  அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.