கொரோனா தடுப்பு மருந்திற்காக 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம்..!: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்

Published By: J.G.Stephan

01 Oct, 2020 | 04:05 PM
image

முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கான  தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு உலகம் முழுவதும் 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம் என சுறா மீன் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த மருந்துக்கு சுறா மீனில் இருந்து எடுக்கப்படும், ஸ்குய்லின் எனப்படும் இயற்கை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது மற்ற மருந்துகள் தயாரிப்பதற்கும் இந்த எண்ணெய் துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய்க்கு இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், மருந்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு டன் ஸ்குய்லின் எண்ணெய் எடுப்பதற்கு 3,000 சுறா மீன்கள் தேவைப்படுகின்றதாம்.

 கலிபோர்னியாவில் இருக்கும் சுறா மீன் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், ''உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க 2,50,000 சுறா மீன்கள் தேவைப்படும். அதுவே, இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டும் என்றால், 5 இலட்சம் சுறா மீன்கள் தேவைப்படும் எனவும், கல்பர் மற்றும் பாஸ்கிங் சுறா மீன் வகைகளில் ஸ்குய்லின் எண்ணெய் அதிகளவில் இருப்பதாகவும் தெரியவருகிறது. 

ஸ்குய்லின்  எண்ணெய்க்காக கரும்பை புளிக்க வைத்து அதில் இருந்து சிந்தெடிக் முறையில் எண்ணெய் எடுக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

அத்தோடு, வருடந்தோறும் 30 இலட்சம் சுறா மீன்களை கொன்று அதில் இருந்து காஸ்மெடிக் மற்றும் இயந்திரங்களுக்கான எண்ணெய் எடுக்கப்படுவதாகவும்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளமையும் முக்கிய அம்சமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47