திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல ஏக்கர் பயறு செய்கைகளுக்கு இனந்தெரியாதோரால்  தீ வைக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள வயல் நிலங்களில் விவசாயிகள் பயறு செய்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இவ்வாறு இனந்தெரியாதாரால் தீ வைக்கப்பட்டுள்ளன.

தற்போது பயறு செய்கை அறுவடை செய்து வருவதோடு,அறுவடைக்கு தயாரான பல ஏக்கர் செய்கைகள் தீக்கிரையாகியுள்ளன.

இவை தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் விவசாயிகளினால் முறைப்பாடும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.