20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமற்றது - சிசிர ஜயக்கொடி

01 Oct, 2020 | 03:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியமைப்பின்  20 ஆவது திருத்தத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பினை மேற்கொள்வது அவசியமற்றது.   மக்கள்  வாக்கெடுப்புக்கு  செல்லாத விடயங்களே திருத்தத்தில்   உள்ளடக்கப்பட்டுள்ளன.  அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு  அரசியமைப்பின்  20 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் முயற்சிகளை  எதிர் தரப்பினர் முன்னெடுத்து வருகிறார்கள்.  அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள முடியும் என   சுதேச  வைத்திய  மேம்பாடு, கிராமிய  மற்றும்    ஆயுர்வேத  வைத்தியசாலைகள்  அபிவிருத்தி  இராஜாங்க  அமைச்சர் சிசிர  ஜயக்கொடி தெரிவித்தார்.

  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியமைப்பின்  20 ஆவது  திருத்தம் தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.  ஜனாதிபதி  சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதாக எதிர் தரப்பினர் மாத்திரமே  குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நாட்டுமக்கள்  ஜனாதிபதி  கோத்தபய  ராஜபக்ஷவின் ஆட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள    அரசியமைப்பின்  20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு  நடத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது. மக்கள் வாக்கெடுப்புக்கு   செல்வதற்கான  எவ்வித  ஏற்பாடுகளும் திருத்தத்தில்  உள்ளன.  அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவினர் தயாரித்த முதற்கட்ட  சட்டமூல வரைபை  சட்டமாதிபர்   முழுமையாக பரிசீலனை செய்தார்.

20  ஆவது திருத்தத்தில்   பாரதூரமான விடயங்கள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை. இல்லாத விடயத்தை சுட்டிக்காட்டி  எதிர் தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.    வர்த்தமானியில் வெளியிட்டப்பட்டுள்ள 20  ஆவது திருத்தம்  அரச நிர்வாகத்தை   பலப்படுத்தும் என்பதை  நாட்டு மக்கள் தெரிந்துக் கொண்டுள்ளார்கள்.

பாராளுமன்றில்  ஆளும் தரப்பினருக்கு பெரும்பான்மை  ஆதரவு உண்டு  20 ஆவது அரசியமைப்பு திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும்.  சுட்டிக்காட்டப்படும் குறைப்பாடுள்  பாராளுமன்ற குழுவின் ஊடாக    திருத்தம் செய்யப்படும் என்பதில் உறுதியாக  உள்ளோம்.  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04