அமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்கள் இரண்டு 1,600 விமானிகள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுவிப்பில் அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

அதன்படி அமெரிக்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் 19 ஆயிரம் ஊழியர்களையும், யுனைடெட் ஏயர்லைன்ஸ் நிறுவனம் 13 ஆயிரம் ஊழியர்களையும் கட்டாய விடுவிப்பில் அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்கன் ஏயர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டக் பார்க்கர், விமான நிறுவனத்திற்கு 19,000 வேலைகளை குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். 

அதேநேரம் யுனைடெட் ஏயர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் கிர்பி, 13,000 ஊழியர்களை குறைப்பதற்கான முடிவு யுனைடெட்டில் உள்ள நம் அனைவருக்கும் மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் உள்ளன. இதுபோன்ற சிக்கலைச் சந்தித்துள்ள அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க அரசின் நிவாரணத் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுவரை ஆட்குறைப்பில் ஈடுபடாமல் இருந்தன. 

தற்போது நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவை இழந்துள்ளதால், தங்களது ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பத் ஆரம்பித்துள்ளன.