மடூல்சீமை, மாஹாதோவ தோட்ட கீழ் பிரிவு மக்கள், பாதையை புனரமைத்து தரும் படி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பசறை, மடூல்சீமை வீதியின் மாஹாதோவ தோட்ட கீழ் பிரிவிலிருந்து யப்பாமை ஊடாக லுணுகலை நோக்கி செல்லும் சுமார் 7கிலோமீற்றர் வரையான பாதை நீண்ட காலாமாக புனரமைக்க படாமல் உள்ளதாக தெரிவிக்கும் ஆர்ப்பாட்டகாரர்கள், தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பாதையை உடன் சீர் செய்து தருமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பாடசாலை சீருடையுடன் பாடசாலை மாணவர்களும்  இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.