இமாதுவ, கொடுகொட பகுதியில் இரண்டு சங்குகளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சங்குகளையும் 26 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் ஹட்டன் பகுதியையும், மற்றைய இருவரும் களுத்துறை மற்றும் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கைதான நபர்களை காலி நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

UPDATE: 

இமதுவ பகுதியில் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இமதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொதாகொட பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வெல்கம , நோர்வூட் , தெனிபிட்டி மற்றும் கெட்டபல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 - 44 ஆகிய வயதுக்கு இடைப்பட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து இரு வலம்புரிச் சங்குகளும் , நான்கு தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் குறித்த வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்கு தயாராகியிருந்த போதே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களுள் ஓய்வுப் பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரும் , ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இமதுவ பொலிஸார் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.