பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும், ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க ஒன்றிணைவோம்: சஜித் அழைப்பு

Published By: J.G.Stephan

01 Oct, 2020 | 12:57 PM
image

(செ.தேன்மொழி)
மிகவும் பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும், ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்திருக்கின்றார். சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கு முதலிடத்தை வழங்கவேண்டும் என்பதை உலகவாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் உலகளாவிய ரீதியில் இன்றைய காலக்கட்டித்தில் சிறுவர்கள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அதற்கமைய உலகம் முழுவதிலும் நாள் ஒன்றுக்கு 16,000 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர். இவர்களுள் 50 சதவீதமான சிறுவர்கள் மந்த போசனத்தினால் உயிரிழப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் சிறுவர் துஷ்பிரயோகம், குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளை வீட்டு பணியாளர் சேவைகளில் ஈடுபடுத்தல் என்பன பாரிய நெருக்கடிகளாக காணப்படுகின்றன. போட்டிநிறைந்த இந்த உலகத்தில் பிள்ளைகள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுவர் உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மேலும் வலுப்பொருந்தியதாக மாற்றவேண்டிய தேவையும் தற்போது மேலோங்கியுள்ளது.

சிறுவர்தினம் போன்று முதியோர் தினமும் இன்று கொண்டாடப்படுகின்றது. முதியவர்களை கவனிப்பது என்பது புண்ணியமான செயலாக பௌத்த தர்மத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பௌத்த நாடான இலங்கையில் 300 முதியோர் இல்லங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பின்புலத்தில் முதியோர் தொடர்பில் புதிதாக சிந்திக்கவேண்டிய காலக்கட்டமே தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் மிகவும் பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும் , ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18