வர்த்தகரொருவர் இனந்தெரியாத ஆயுததாரியால் துப்பாக்கியால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை, பற்றிவத்தை வத்துகெதர பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 49 வயதுடைய வர்த்தகரே உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் தெரடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.