மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணிவரையான காலப்  பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 417 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் அநேகமானோர் (163 பேர்) ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் கஞ்சாவுடன் 103 பேரும், சட்டவிரோத மதுபானத்துடன் 88 பேரும், ஐஸ் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்களுடன் 31 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக 36 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.