கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவித்த மொத்தம் 331 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 312 இலங்கையர்கள் அதிகாலை 2.55 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 19 இலங்கையர்கள் அதிகாலை 12.45 மணிக்கு எடிஹாட் ஏயர்லைன்ஸ் விமானத்துக்கு சொந்தமான EY-264 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரையும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தவும், தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.