சஞ்சு சம்சனின் அதிரடிக்கு கடிவாளமிடுமா கொல்கத்தா; நாணய சுழற்சியில் ராஜஸ்தான் வெற்றி

Published By: Vishnu

30 Sep, 2020 | 09:09 PM
image

ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் 12 ஆவது போட்டி தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

இந்த ஆட்டம் துபாயில் இலங்கை நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள ராஜஸ்தான் அணியானது களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

ராஜஸ்தான் அணியை பொறுத்த வரையில் முதல் இரு ஆட்டங்களில் 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அபார வெற்றி பெற்று வீறு நடைபெற்று வருகிறது.

முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கொண்டுள்ள ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

ராஜஸ்தானின் இளம் வீரரான சஞ்சு சம்சனின் அதிரடிக்கு கடிவாளம் இடுவது என்பது எதிரணி வீரர்களுக்கு பெரும் சிம்ம சொப்பனமாகவே உள்ளது. 

அந்த வகையில் சென்னைக்கு எதிராக 74 ஓட்டங்களையும், பஞ்சாப்புக்கு எதிராக 85 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார். இந் நிலையில் இன்றைய ஆட்டத்திலும் அவரது அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதவிர, அந்த அணியில் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், ஜோஸ் பட்லா், ராகுல் தெவேதியா, ராபின் உத்தப்பா, ஜோப்ரா ஆா்ச்சா் என வலுவான துடுப்பாட்ட வீரர்களும் அணிக்கு வலுச் சேர்த்துள்ளனர.

வேகப்பந்து வீச்சில் ஜெயதேவ் உனட்கட், அங்கித் ராஜ்புட், டோம் கரன், ஜோப்ரா ஆா்ச்சா் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவேதியா கூட்டணியையும் நம்பிக்கை அளிக்கிறது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் சுப்மான் கில், தினேஷ் காா்த்திக், நிதிஷ் ராணா, இயோன் மோா்கன், ஆன்ட்ரே ரஸல் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், சுப்மான் கில், மோா்கன் தவிர வேறு யாரும் பெரிய அளவில் இத் தொடரில் அவர்களின் திறனை வெளிப்படுத்தவில்லை.

எனவே, ராஜஸ்தானுக்கு எதிராக முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தால் மாத்திரம் கொல்கத்தா வெற்றி பெற முடியும்.

வேகப்பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, கமலேஷ் நகா்கோட்டி, ஆன்ட்ரே ரஸல் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் சுநீல் நரேன், குல்தீப் யாதவ், வருண் சக்ரவா்த்தி ஆகியோரையும் நம்பியுள்ளது கொல்கத்தா.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 10 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35