“ அம்மாச்சி ” உணவகம் கிளிநொச்சியில் திறப்பு

Published By: Priyatharshan

18 Jul, 2016 | 11:54 AM
image

வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி”கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.

போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை அமைத்து வருகிறது.

ஏற்கனவே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திறந்துவைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிவரும் நிலையில், தற்போது கிளிநொச்சியிலும் அம்மாச்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

5.5 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில் உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் உரிமம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுடரமுதம், தேனமுதம் ஆகிய மாதர் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இங்கு பாரம்பரிய உணவு வகைகள் நுகர்வோருக்கு உடனுக்குடன் தயாரித்துப் பரிமாறப்பட இருப்பதாகவும் எந்தவிதமான செயற்கை நிறமூட்டிகளோ செயற்கைச் சுவையூட்டிகளோ உணவில் சேர்க்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இத்திறப்புவிழா நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் உட்பட மாகாண மத்திய திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் பொதுமக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03
news-image

எதிர்கால வணித் தலைவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்...

2024-05-11 19:07:20