உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார்.  

ஐக்கிய நாடுகள் சபையில்  நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் உலகில் தொற்றாத நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து  தான் கலந்துரையாடப் போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

குறித்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.