முன்னாள் உலக நம்பவர் வன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் புதன்கிழமை தனது இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு முன்னதாக பிரான்ஸ் ஓபன் (பகிரங்க) தொடரிலிருந்து விலகியுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 

இத் தொடரில் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான கனவுடன் களமிறங்கிய 39 வயதான அமெரிக்க வீராங்கனை செரீனா இன்றைய தினம் இடம்பெறும் ஆட்டத்தில் பல்கேரியன் வீராங்கனை ஸ்வெட்டானா பிரான்கோவாவை எதிர்கொள்ளவிருந்தார்.

இந்த மாத தொடக்கத்தில் விக்டோரியா அஸரெங்காவிடம் நடந்த அமெரிக்க ஓபன் அரையிறுதி தோல்வியின் போது செரீனா காயம் அடைந்தார்.

பாரிஸில் மூன்று முறை சாம்பியனான செரீனா தசைநார் காயத்துடன் இந்த தொடரில் பங்கேற்றார். எனினும் காயம் குணமடைவதற்கு மேலும் ஓய்வு தேவைப்படுவதானல் அவர் இரண்டாவது சுற்றுக்கு முன்னர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அதேநேரம் செரீனா இந்த ஆண்டு நான் ஏனைய போட்டிகளில் விளையாட மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.