கொரோனா பிரச்சினைக்கு மத்தியில் உணவுப் பொருட்களின் விலை வாசிகள் சடுதியாகஅதிகரித்துள்ளன. 

அதேவேளை வருமானம் பன்மடங்கு சரிந்ததை அடுத்து மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடத்தல்கள் கலப்படங்கள் என்று அது வேறு அதிகரித்து வருகிறது.

இவற்றுக்கு மத்தியில் கேரள கஞ்சா போன்று அன்றாடம் பெருந்தொகையான மஞ்சளும் கைப்பற்றப்பட்டு வருகிறது. 

அரசாங்கம் இலங்கையில் அதிக அளவு  மஞ்சளை உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்தது. 

இதனை அடுத்து இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படும் மஞ்சள் பெரும் தொகையில் கைப்பற்றப்பட்டு வருகின்றது.

சாதாரணமாக மஞ்சள் ஒரு கிலோ தற்போதைய நிலையில் சுமார் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாகவே இந்தியாவில் இருந்து பல்வேறு வழிகளில் இலங்கைக்கு மஞ்சளை கடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. 

கடத்தல்காரர்கள் கேரள  கஞ்சா மற்றும் மஞ்சள் என்பவற்றை மிகவும் சூட்சுமமான வழிகளில் இலங்கைக்கு கடத்தி வருகின்றனர்.

இலங்கையை பொறுத்தமட்டில்  மாதம் மக்களின் நுகர்வின் பொருட்டு மஞ்சள் 5300 மெட்ரிக் டன்கள் தேவைப்படுகின்றன.

உணவு தயாரிப்பின் பொருட்டும் மருத்துவதேவைகளின்  பொருட்டும் மங்கள பொருளாகவும் மக்கள் மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர் .

இந்நிலையில் சடுதியாக அவற்றை நிறுத்தியதால் மக்கள் மிகுந்த கஷ்டங்களைகளை எதிர்நோக்கியுள்ளனர். 

சாதாரணமாக அவற்றின் விலைவாசிகள் முழுவீச்சில் அதிகரித்துள்ளன. இதனால் போலிகளும் கலப்படங்களும் ஏராளமாக வருகின்றன.

இதனைப் பயிரிட்டாலும் அதுபயன்தர சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் உடனடியாக அதன் பயனை நுகர முடியாது .  

இதனிடையே இலங்கைக்கு மறைத்துக் கொண்டு வரப்பட்ட 11 கோடி ரூபா பெறுமதியான 33 ஆயிரம் கிலோ மஞ்சள் அடங்கிய 3 கொள்கலன்கள் அண்மையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து கொண்டு செல்ல அனுமதித்த சுங்க அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு முக்கிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது வரவேற்கத்தக்கதாக இருப்பினும் நாடு தன்னிறைவு காணும் வரையில் அதாவது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

அதனை விடுத்து உப உணவு ப் பொருட்களுக்கு தடைவிதித்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது விவேகமான ஒரு நடவடிக்கையாக அமையாது.மேலும் கேரள கஞ்சா போன்று மங்களப் பொருளான மஞ்சளுக்கும் வந்த கதி  தான் கவலை அளிக்கிறது.