நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,379 ஆக அதிகரித்துள்ளது. ஓமானிலிருந்து நாடு திரும்பிய நால்வருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 3,230 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை,  46 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில்  வைக்கப்பட்டுள்ளதுடன்  இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.