பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்தி அமைத்தல் குறித்தும் ஊடகவியலாளர்களின் தொழிற்திறன்களை மேம்படுத்துவதற்கு பயிற்சி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் செவ்வாய்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர்கள் தொழில் அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகன  கலந்துரையாடல்   செவ்வாய்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது 

இதன் போது, 

அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களினால் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வர்த்தக துறைகளுக்கும் ஏற்படும் முறையற்ற அழுத்தங்கள் மற்றும் தவறான அபிப்பிராயங்கள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதாக இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயங்களை கருத்திற்கொண்டு  ஊடகவியலாளர்களின் தொழிற்திறன்களை மேம்படுத்துவதற்கு பயிற்சி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பத்தல் குறித்தும் பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி தலைமையில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.