2021 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டம் நவம்பர்  17 இல் சமர்ப்பிக்கப்படும்

Published By: R. Kalaichelvan

30 Sep, 2020 | 04:06 PM
image

( இராஜதுரை ஹஷான்)

2021 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்றுமதி  உற்பத்திகளை  ஊக்கப்படுத்தவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது என நிதி மற்றும் மூலதனச்சந்தை மற்றும்  அரச தொழில் முயற்சி  சீர்திருத்தம்  இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நிதியமைச்சில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய உற்பத்திகளை முக்கியத்துவப்படுத்தி 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. சுபீட்சமான எதிர்கால    தொலைநோக்கு அரசாங்கத்தின் திட்டங்களை பெற்றிக் கொள்ள    தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல்.

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு விடயதானங்கள் வழங்கப்பட்டமைக்கு அமைவாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட வகையில்  தொடர்புடைய இலக்கை நிறைவேற்றுவதற்கு தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடி நீரை வழங்குதல்  முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 100இ000 கிலோ மீற்றர் வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ,  நீர்வள மற்றும் நீர்ப்பாசன துறைகளுக்காக முக்கியத்துவம் வழங்குதல்.

அரச  வருமானம் 2021 ஆம் ஆண்டிற்குள் தேசிய உற்பத்தியில் 10.2 சதவீதமாக அமையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த நிலைமையின் கீழ் செலவை முகாமைத்துவம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்து வர்த்தக நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி அரச முதலீட்டு வேலைத்திட்டத்திற்காக வளங்களை ஒதுக்கீடு செய்தல்.  அரசாங்க பணிகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல்.

குறைந்த வளங்களை பயன்படுத்தி மிகவும் பயனுள்ள பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தற்பொழுதுள்ள நடைமுறைகளை மதிப்பீடு செய்து பரந்துபட்ட நடைமுறையில் ஈடுபடுவது தொடர்பில் கவனம் செலுத்துதல்.  குறிப்பிடப்பட்ட   கொள்கையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20