(இராஜதுரை ஹஷான்)

அரசியமைப்பின்  20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கத்துக்கும்,  ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம்பெறாது.  வர்த்தமானியில் வெளியாகியுள்ள  அரசியலமைப்பின்  20  ஆவது திருத்தினால்  ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு  பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக் கொள்ளப்படும் என  காணி விவகார இராஜாங்கஅமைச்சர் ரொஷான் ரணசிங்க  தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியபமைப்பின் 20 ஆவது திருத்தம்  குறித்து உயர்நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுக்கல்  தொடர்பில்  உயர்நீதிமன்றம்  பரிசீலனை செய்து வருகிறது.

மக்கள் உண்மை தன்மைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும்.  வர்த்தமானியில் வெளியாக  திருத்தம் தொடர்பில்  உயர்நீதிமன்றம்   வழங்கும் ஆலோசனைகளை முழுமையாக  ஏற்றுக் கொள்வோம்.

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தை கொண்டு  எதிர் தரப்பினர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகளை  தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில்  ஏற்பட்ட  அதிகார ரீதியான முரண்பாடுகள்  தற்போதைய அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது.

20  ஆவது திருத்ததில்  காணப்படும் ஒரு சில  குறைப்பாடுகள்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அக்குறைகள் பாராளுமன்றகுழு ஊடாக   பரிசீலனை செய்யப்படும்.

சர்வாதிகாரமான அரச நிர்வாக்தை செயற்படுத்த வேண்டிய தேவை   ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் கிடையாது.  நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.

ஆட்சியாளர்கள் மக்களின் ஆணையை  தவறாக  செயற்படுத்தும் போது மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.கடந்த அரசாங்கம் தான் தோன்றித்தனமாக செயற்பட்டதால் மக்களால் புறக்கணிக்கப்பட்டது.  அரசாங்கமும்  மக்களாணையினை தவறான  பயன்படுத்தினால் மக்களால்  வெறுக்கப்படும். ஆகவே  மக்களுக்காகவே சிறந்த முறையில் செயல்படுவோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.