குவைத்தின் புதிய மன்னராக  83 வயதுடைய ஷேக் நவாஃப் அல்-அஹ்மட் அல்-சபா பதவியேற்றுள்ளார்.

குவைத் மன்னரான ஷேக் சபா தனது 91 வயதில் அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ள நிலையிலேயே ஷேக் நவாஃப் அல்-அஹ்மட் புதன்கிழமை பதவியேற்றுள்ளார்.

பதவிப் பிரமாணம் மேற்கொண்ட ஷேக் நவாஃப் சட்ட மன்றத்தில் உரையாற்றும்போது 14 ஆண்டுகளாக குவைத்தை ஆட்சி செய்த புகழ்பெற்ற இராஜதந்திரியான ஷேக் சபா உயிரிழந்ததை எண்ணி உணர்ச்சி வசப்பட்டார்.

இந் நிலையில் உயிரிழந்த ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவின் உடல் புதன்கிழமை பிற்பகுதியல் குவைத்துக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக அரச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு அமைய ஷேக் சபாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் உறவினர்கள் மாத்திரம் கலந்துகொள்வார்கள்.  

இதேவேளை மன்னர் ஷேக் சபாவின் உயிரிழப்புக்காக குவைத்தில் 40 நாள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.