சொரியாசிஸ் எனப்படும் தோல் தடிப்பு அழற்சியை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பயோலாஜிக் தெரபி எனப்படும் உயிரியல் சிகிச்சை, இதய பாதிப்புகளை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

சொரியாசிஸ் எனப்படும் தடிப்பு தோல் அழற்சியை குணப்படுத்துவதற்காக புரதச் சத்தை மையமாகக்கொண்ட பயோலாஜிக் தெரபி எனப்படும் உயிரியல் சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்போது உடலுக்குள் செல்லும் புரதச்சத்து, இதய தமனிகளில் உள்ள ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புகளையும், அசுத்தங்களையும் கரைய செய்வதாகவும்,  இதன் காரணமாக இதய பாதிப்புகள் ஏற்படுவது குறைவதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.  

குறிப்பாக மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவதாக தெரிவிக்கிறார்கள். இமேஜிங் தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் இத்தகைய விளைவுகள் குறித்து, மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர் துர்கா தேவி

தொகுப்பு அனுஷா.