நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி வரும் ‘கபடதாரி’ படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது.

‘வால்டர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர்  சிபி சத்யராஜின் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கபடதாரி’. 

இந்த படத்தில் சிபி சத்யராஜுடன் நடிகை நந்திதா ஸ்வேதா, நடிகர்கள் நாசர், ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜி தனஞ்ஜெயன், இயக்குநர் ஜோன் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் இணைந்து எழுத, ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். 

ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.

கொரோனா காரணமாக இதன் படபிடிப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு  அனுமதியளித்த பிறகு, இதன் படபிடிப்பு சென்னையின் புறநகர் பகுதியில் நடைபெற்றது. 

அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் படபிடிப்பு நடத்தி, முழு படபிடிப்பையும் படக்குழுவினர் நிறைவு செய்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்ஜெயன் பேசுகையில்,‘ படத்தை நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம். 

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியானவுடன் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும்.” என்றார்,