சர்சைக்குரிய சுமணரத்தின தேரரருக்குப் பிணை : மீண்டும் ஆஜராகுமாறும் உத்தரவு

Published By: Digital Desk 4

30 Sep, 2020 | 02:25 PM
image

மட்டக்களப்பு பண்டாரவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட 3 ஆஜரான நிலையில் அவர்களை 2 இலட்சம் ரூபா சரிரப் பிணயில் விடுவித்து கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும்  எதிர்வரும் நவம்பர் 27 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு  நீதவான் உத்தரவிட்டார்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பண்டாரவெளி பகுதியில் பௌத்த மத அடையாளம் இருப்பதாக குறித்த பகுதியில் கடந்த காலங்களில் சுமணரத்தன தேரர் சென்ற நிலையில் பல சர்ச்சைகள் இடம்பெற்று நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றது.

குறித்த இடத்தில் தொல்லியல் திணைக்களம் அடையாளம் கண்டு அங்கு திணைக்களம் தற்காலிக கொட்டகை அமைத்து தொல்பொருள் ஆராச்சிகள் இடம்பெற்று வருகின்றது. 

இந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி அங்கு சென்ற அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக கரடியானு பொலிசார் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் அவருடன் சேர்ந்த 3 பேருக்கும் இவர்களுக்கு எதிராக ஆதிகாரிகளை தாக்கியது, அவர்களை தடுத்துவைத்தது அதிகாரிகள் கடமையை செய்யாவிடாது இடையூறு ஏற்படுத்தியது போன்ற குற்றச்சாட்டு சாட்டப்பட்டு வழக்கு தாக்குதல் செய்தனர்.

இதனையடுத்து இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட 3 பேர் ஆஜராகினர் இதன்போது இவர்களை நீதவான் 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவித்ததுடன் தொல்லியல் திணைக்களத்துக்கு இடையூறு செய்யக்கூடாது, பொதுமக்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் எச்சரித்து ,கரடியாறு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார் 

இதேவேளை நீதிமன்ற பகுதில்  பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதுடன். தேரர் 50 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02