கொழும்பு, ஆமர் வீதி பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றியொன்று இன்று முற்பகல் 12.30 மணியளவில் தீப் பிடித்து எரிந்துள்ளது.

தீ விபத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த மின் மாற்றியில் ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தினையடுத்து அப் பகுதியில் ஏற்பட்ட வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.