(எம்.மனோசித்ரா)

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக 39 பேர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே இது தொடர்பான விடயத்தை நீதிமன்றத்தில் விவாதிப்பதே பொறுத்தமானதாக இருக்கும் என்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நீதி மன்றம் தீர்ப்பை வழங்கினாலும் அதனை ஆதரிப்பவர்களும் எதிரானவர்களும் இருப்பார்கள். 39 பேர் 20 இற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே நீதிமன்றத்தில் விவாதிப்பதே சிறந்த வழியாகும்.

சபாநாயகர் என்ற ரீதியில் அதனை சபையில் சமர்பிப்பது மாத்திரமே எனது கடமையாகும். அதற்கு அடுத்த கட்டம் சபையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தினடிப்படையிலானதாகும்.

அடுத்த மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். தீர்வு வழங்கிய பின்னர் அதனுடன் இவ்விடயம் நிறைவுக்கு வந்துவிடும் என்றார்.