2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் முன்மொழியப்படும் என  நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரல் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.