மேல் மாகாணத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மேலும் 459 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 5 மணிவரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போதே இவ்வாறு பலர் கைது செய்யப்படனர்.

இதில் 158 பேர்  ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்112 சந்தேக நபர்கள் கஞ்சா வைத்திருந்ததோடு , 106 பேர்  பல்வேறு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.