“என் உயிர்நண்பன் நீதான்..” - 24 மணிநேரமும் எலும்புக்கூட்டுடன் பொழுதைக் கழிக்கும் 2 வயது குழந்தை!: காரணம் என்ன?

Published By: J.G.Stephan

30 Sep, 2020 | 12:02 PM
image

குழந்தைகள் என்றாலே பொதுவாக விளையாட்டுப்பொருட்கள், பொம்மைகள், என்பவற்றுடன் விளையாடி, தமது பொழுதைக் கழிப்பதையே வாடிக்கையாகப் பார்த்திருக்கின்றோம், அமெரிக்காவில் சற்று வித்தியாசமாக, 2 வயது குழந்தையொன்று எலும்புக்கூட்டை தனது சிறந்த நண்பனாக நினைத்து, 24 மணி நேரமும் அதனோடு வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் வீட்டின் அடித்தளத்தில் உள்ள பகுதியை, தாயார் சுத்தம் செய்து கொண்டிருக்கையில், தியோ எனும் அமெரிக்காவைச் சேர்ந்த  2 வயது குழந்தையின் கண்களில் ஒரு பிளாஸ்டிக் எலும்புக்கூடு தென்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்தும், குழந்தைக்கு அது பிடித்து போகவே, அதை கையோடு தூக்கி ஆவலாக அணைத்துக்கொண்டது.

அத்தோடு, அந்த  எலும்புக்கூடுக்கு 'பென்னி' என பெயரிட்டு, அதனை தனது நெருங்கிய நண்பனாக கருதி அதனுடனே விளையாட ஆரம்பித்துவிட்டது.

வெளியே எங்கு சென்றாலும் பென்னி இல்லாமல் தியோ செல்வதில்லையாம்.  அதேபோல் உறங்கும் போதும் கூட பென்னியுடன் தான் உறங்குவதாகவும், முதலில் இதனைத் தடுக்க முயன்ற தாய், பின்னர் மகனின் விருப்பதிற்கே விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது, முழுநேரத்தையும் பென்னியென அழைக்கப்படும் எலும்புக்கூட்டுடன்தான் தனது மகன் கழித்து வருவதாகவும், தாயார் தெரிவித்துள்ளார். 

மேலும், எலும்புக்கூடுடன் தியோ விளையாடும் காணொளிகளை தாயார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன விநோதமாக இருக்கிறதே என குறிப்பிட்டுள்ளனர். அதற்கு குழந்தையின் தாயார், "பென்னி (எலும்புக்கூடு) மீது எனது மகனுக்கு பயங்கரமான வெறிபிடித்த அன்பு ஏற்பட்டுவிட்டது", என  பதில் அளித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது மகனின் விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக்கில் நாய் ஒன்றின் எலும்புக்கூடு போன்ற பொம்மையை தன் மகனுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் குறித்தக் குழந்தையின் தாயார். 



இவ்விடயம் சற்று வித்தியாசமாகவுள்ளதென சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுவந்தாலும், இதுபோன்ற விடயங்களை குழந்தையின் விருப்பத்திற்கேற்ப செய்யக்கூடாதெனவும் பலர் தாயாருக்கு அறிவுரை கூறிவருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right