பாதாள உலக குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல் காரருமான 'ரத்மலானை அஞ்சு' என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் 21.5 கிராம் ஹெரோயினுடன் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் மஹரகம பொலிஸார் இரு பெண்கள் உட்பட ஐவரை 1.1 கிலோ கிராம் ஹெரோயினுடனும் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.