குவைத் மன்னர் ஷேக் சபாவின் உயிரிழப்புக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

கெளரவத்துக்குரிய குவைத்தின் எமிரான ஷேக் சபா அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபாவின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

இந் நிலையில் இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், குவைத் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.