கொங்கோவில் எபோலா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுப்பட்ட உதவிப்பணியாளர்களால் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில்  விசாரனைகளை மேற்கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) உறுதியளித்துள்ளது.

இரு செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட விசாரனைகளின் போது, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இதர முகவர் நிறுவனங்களின் பணியாளர்கள்  மீது 50 பெண்கள் குற்றம் சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

கொங்கோவில் உள்ளூர் பெண்களுக்கு வைத்தியசாலையில் பானங்களை கொடுத்து கட்டாயப்படுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுப்பட்டதாகவும், இதனால் இரு பெண்கள் கர்ப்பமானதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

, வைத்தியசாலைகளில் "பதுங்கியிருந்து", உடலுறவு கொள்ள நிர்பந்திக்கப்பட்டதாகவும், இரண்டு பேர் கர்ப்பமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலப்பகுதியிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மனிதாபிமான செய்தி நிறுவனமும், தொம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையும் கிட்டத்தட்ட ஒரு வருட கால விசாரணையை நடத்தியுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் "வலுவாக விசாரிக்கப்படும்" என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

மேலும் , "சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டு, உடனடியாக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"நாங்கள் சேவை செய்யும் சமூகங்களில் உள்ளவர்களைக் காட்டிக் கொடுப்பது கண்டிக்கத்தக்கது."

கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்றால்  2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர்.

மற்ற நாடுகளில் உள்ள சில பணியாளர்கள் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐ.நா மற்றும் உதவி நிறுவனங்கள் பாலியல் துஷ்பிரயோகத்தை பூச்சியமாக்குவதாக முன்னர் உறுதியளித்திருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.