(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரரான ரியாஜ் பதியுதீன் என அறியப்படும் பதியுதீன் மொஹமட் ரியாஜ் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டு , பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஏபரல் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், அன்று முதல், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந் நிலையிலேயேஅவ் விசாரணைகளில் அவருக்கும், ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக நியாயமான சான்றுகள் வெளிப்படுத்தப்படாத நிலையில், அவர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.