( எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் திருத்த சட்ட மூலமானது, அரசியலமைப்பொன்றின் அடிப்படை கட்டமைப்புக்களை சிதைக்கும் வகையிலும் அதன் அடிப்படை கொள்கைகளை மீறும் வகையிலும் வரையப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.
அதனால் அந்த 20ஆம் திருத்த சட்ட மூலமானது சட்டத்தின் முன் வலுவற்ற ஒரு ஆவணம் எனவும், உத்தேச சட்ட மூலத்தின் ஊடாக சட்டவாக்கத் துறையின் அதிகாரங்கள்,  நீதித் துறையின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மிகப் பெருமளவில் பாதிப்படையும் எனவும் அவர் எச்சரித்தார்.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் விசேட மனு மீது மன்றில் வாதங்களை முன்வைக்கும் போதே அவர் மேற்படி விடயங்களை முன்வைத்தார்.