பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மெட்ரிக் தொன் அரிசி மீட்பு; வெளியானது காரணம்

30 Sep, 2020 | 11:01 AM
image

300 மில்லியன் பெறுமதியான 300 மெட்ரிக் தொன் அரிசி விலங்கு உணவு உற்பத்திக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த இரகசிய தவலுக்கிணங்க ஜா-எல, ஏக்கல பகுதியில் அமைந்துள்ள விலங்கு உணவு தயாரிப்பு தொழிற்சாலையொன்றுக்கு பந்துல குணவர்தன சகிதம் சென்ற நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் களஞ்சியசாலையில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகை அரிசியை மீட்டுள்ளனர்.

விலங்கு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் இவ்வாறு தானியங்கள் பதுக்கி வைப்பதன் காரணமாக நுகர்வோர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகின்றனர். 

இதேவேளை உள்ளூர் உற்பத்தி அரசி மற்றும் உப உணவு பொருட்களை விலங்கு உணவு உற்பத்திக்கு பயன்படுத்தக் கூடாது என விசேட வர்த்தமானி அறிவித்தல் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீட்பு நடவடிக்கையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர், ஜா-எல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் கம்பஹா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் என பலர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32